சமூக வலைத்தளங்கள் மன அழுத்தத்தை உருவாக்கும்; நிஜ வாழ்க்கையை சிதைக்கும் - அதிர்ச்சி தகவல்!

World Social Media
By Jiyath Dec 19, 2023 04:19 AM GMT
Report

சமூக வலைதளங்கள் மனித மூளைகளை ஆக்கிரமித்து மன அழுத்தத்தை உருவாக்குவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தளம் 

ஜெர்மனி நாட்டின் மனநல மையம் மற்றும் ரூர் பல்கலைக்கழகமும் இணைந்து இணைந்து ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்விற்காக 35 நிமிடத்திற்கு அதிகமாக சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தும் 166 நபர்கள் தொடர்ச்சியாக 30 நாட்கள் கண்காணிக்கப்பட்டு ஆய்வு முடிவு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் மன அழுத்தத்தை உருவாக்கும்; நிஜ வாழ்க்கையை சிதைக்கும் - அதிர்ச்சி தகவல்! | Social Media Sites That Create Stress Depression

அந்த ஆய்வில், சமூக வலைத்தளங்கள் மனித மூளைகளின் செயல்பாட்டை குறைக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளங்களை 30 நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்தும் நபர் கவனச் சிதறல் கொண்டவராகவும், பணிச்சுமைக்கு உள்ளானவராகவும், பணியில் கவனம் குறைந்த நபராகவும் காணப்படுகிறார்‌.

சென்னையில் ஒரு பெரிய அரண்மனை; வசித்து வரும் மன்னர் குடும்பம் - எங்கு தெரியுமா?

சென்னையில் ஒரு பெரிய அரண்மனை; வசித்து வரும் மன்னர் குடும்பம் - எங்கு தெரியுமா?

மன அழுத்தம் 

சமூக வலைத்தளங்கள் மனித மூளையின் சிந்திப்புத் தன்மையை குறைத்து, அவற்றை மழுங்கடித்து வருகின்றன. இதன் மூலம் பணியில் அவருக்கு அதிருப்தி ஏற்பட்டு மன அழுத்தத்தை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.

சமூக வலைத்தளங்கள் மன அழுத்தத்தை உருவாக்கும்; நிஜ வாழ்க்கையை சிதைக்கும் - அதிர்ச்சி தகவல்! | Social Media Sites That Create Stress Depression

தொடர்ச்சியாக 35 நிமிடத்திற்கு மேல் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் நபர் குறிப்பிட்ட சமூக வலைத்தளத்திற்கு அடிமையான நபராக கருதப்படுகிறார். சமூக வலைதளங்களை பயன்படுத்த இயலாத சூழல் ஏற்படும் போது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, பின்னர் மீட்டெடுக்க நடவடிக்கையை மட்டுமே தனது முழு நேர பணியாக மேற்கொள்கிறார்கள். மேலும் சமூக வலைதளங்கள் நிஜ வாழ்க்கையை சிதைத்து, உரையாடல்களை குறித்து உண்மைக்கு மாறானதாக உருவாகி இருக்கிறது என்று அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.