நீண்ட ஆயுளோடு வாழ வேண்டுமா..? சீக்ரெட் சொன்ன உலகின் மிக வயதான மனிதர்!

Guinness World Records England World
By Jiyath Apr 08, 2024 09:55 AM GMT
Report

உலகின் மிக வயதான நபரான 'ஜான் ஆல்பிரட் டின்னிஸ் உட்' தனது நீண்ட ஆயுளின் ரகசியத்தை பகிர்ந்துள்ளார்.

மிக வயதான மனிதர்

உலகின் மிக வயதான மனிதராக வெனிசுலாவை சேர்ந்த 114 வயதான ஜூவான் விசென்டே பெரேஸ் மோரா என்பவர் இருந்தார். இவர் சமீபத்தில் காலமான நிலையில், தற்போது இங்கிலாந்தை சேர்ந்த 111 வயது ஜான் ஆல்பிரட் டின்னிஸ் உட் என்பவர் உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளார்.

நீண்ட ஆயுளோடு வாழ வேண்டுமா..? சீக்ரெட் சொன்ன உலகின் மிக வயதான மனிதர்! | Worlds Oldest Man Reveals Secret To His Longevity

இந்நிலையில் தனது நீண்ட ஆயுளின் ரகசியத்தை அவர் யூடியூப்பில் பகிர்ந்துள்ளார். அதில் "நீண்ட ஆயுளுக்காக உணவு ரகசியங்கள் என்று எந்த சிறப்பு அம்சமும் இல்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மீன் மற்றும் சிப்ஸ் சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

பேரனுக்காக TVS 50 ஓட்டுனாரு .. தாத்தாவுக்காக Flight ஓட்டுறேன் - வானில் நெகிழ்ச்சி தருணம்!

பேரனுக்காக TVS 50 ஓட்டுனாரு .. தாத்தாவுக்காக Flight ஓட்டுறேன் - வானில் நெகிழ்ச்சி தருணம்!

ஆயுள் ரகசியம் 

எதைப்பற்றியும் அதிகமாக சிந்தித்தால் அதிகம் எதையும் செய்ய முடியாது. பிறந்த தேதி, மரபியல், குடும்ப வரலாறு போன்றவை நீண்ட ஆயுளில் பங்கு வகித்தாலும் தனி நபரின் வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனக்கு என்று தனியாக எந்த சிறப்பு உணவு முறையும் இல்லை.

நீண்ட ஆயுளோடு வாழ வேண்டுமா..? சீக்ரெட் சொன்ன உலகின் மிக வயதான மனிதர்! | Worlds Oldest Man Reveals Secret To His Longevity

ஆனாலும் சமச்சீர் உணவு, பழங்கள், காய்கறிகளை அதிகமாக சேர்த்துக்கொள்வது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அளவோடு உண்பது போன்றவை நல்ல ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக அமையும். எனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் கிடையாது. அதேபோல் மதுவை அரிதாகவே அருந்துவேன்" என்று தெரிவித்துள்ளார்.