உலகின் மூத்த இரட்டையர்கள் உயிரிழந்தனர் - இவர்களில் ஒருவர் பெண், மற்றொருவர்?
லோரி மற்றும் ஜார்ஜ் ஸ்சாபெல் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் அவர்களது 62 வயதில் காலமானார்கள்.
மூத்த இரட்டையர்கள்
அமெரிக்க மாகாணத்தில் உள்ள பென்சில்வேனியா பகுதியில் கடந்த 1961ஆம் ஆண்டு அன்று லோரி மற்றும் ஜார்ஜ் என்ற ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பிறந்தார்கள். இந்த இருவரும் மரபணு ரீதியாக ஒரே மாதிரியானவர்கள்.தலை ஒட்டியிருப்பதால் இவர்களது அமைப்பு ஒருவருக்கொருவர் எதிர் எதிராக இருக்கும்.
இது மட்டுமல்லாமல், லோரி மற்றும் ஜார்ஜின் பழக்கவழக்கங்கள், பண்புகள் மற்றும் லட்சியங்களும் எதிர் எதிராக இருக்குமாம். இது கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுள்ளது. வெவ்வேறு ஆசைகள். தேவைகள் இருப்பினும் இருவரும் ஒருவருக்கொருவர் உருதுணையாக இருக்கின்றனர்.
உயிரிழந்தனர்
இதில் ஜார்ஜூக்கு பாடல் பாடுவது, பயணம் செய்வதில் அதிக ஆர்வம். அதேபோல, லோரி விருது வென்ற பந்து வீச்சாளர் ஆவார். பிறப்பில் பெண்களாக பிறந்த லோரி மற்றும் ஜார்ஜ் சில காலம் அப்படியே வாழ்ந்துவந்தனர். எனினும் கடந்த 2007 ல் ஜார்ஜ் தன்னை மூன்றாம் பாலின ஆண் என கண்டறிந்தார்.
அதிலிருந்து ஆண்களின் உடையே அவர் அணிந்து வருகிறார். மேலும், லோரி உடலில் எந்தக் குறைப்பாடும் இல்லை ஆனால் ஜார்ஜுக்கு ஸ்பைனா பிஃபிடா எனும் நோயால் பத்திக்கப்பட்டதால் அவரால் நடக்க முடியாது. எனவே சக்கரம் பொருத்திய நாற்காலியை பயன்படுத்துகிறார்.
இருவரும் பிறந்த போது 30 ஆண்டுகளுக்குக்கூட இருக்க முடியாது என மருத்துவர்கள் கணித்திருந்தனர். ஆனால் 62 வயதுவரை இருந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி இருவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இறப்பிற்கான காரணம் அறியப்படவில்லை .