குழந்தை பெத்துக்கனும் - 50 வயது ஆணோடு ஒட்டிப் பிறந்த சகோதரி வேதனை!
ஒட்டி பிறந்த இரட்டையர்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் சங்கடங்கள் குறித்து பகிர்ந்துள்ளனர்.
இரட்டையர்கள்
அமெரிக்கா, பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் லோரி மற்றும் ஜார்ஜ் ஷாப்பல் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். தலைகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு காணப்படுவார்கள். அவர்களின் முன் மடல் திசுக்களில் 30 சதவீதம் மற்றும் முக்கியமான இரத்த திசுக்கள் இணைக்கப்பட்டுள்ளதால் பிரிக்க இயலாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் லோரி ஒரு பெண். திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெற விரும்புகிறார். தன் சகோதரனை வைத்துக் கொண்டு தனிமையான விவகாரங்களில் ஈடுபட முடியவில்லை. தனது காதலனுடன் டேட்டிங் மற்றும் நேரத்தை செலவிடும் போது நிறைய பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இருவரின் தலைகளும் வெவ்வேறு திசைகளில் உள்ளன.
சகோதரி வேதனை
எனவே லோரி தன் காதலனை முத்தமிடும்போது, ஜார்ஜ் எதையும் பார்ப்பதில்லை. தனிமையில் இருக்கும்போது ஜார்ஜ் ஒரு புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு அதில் மூழ்கி விடுவார். இருவரில் ஒருவர் குளிக்க வேண்டியிருக்கும் போது, அவர் தனது தலைக்கு அருகில் ஒரு முக்காடு கொண்டு வருவார் எனத் தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் 50வயது. ஜார்ஜால் நடக்க முடியாது, அவர் சக்கர நாற்காலியில் தான் இருக்கிறார். அதை லோரி தள்ளிச் செல்கிறார். லோரியின் உயரம் 5 அடி 1 அங்குலம். ஜார்ஜ் 4 அடி 4 அங்குலம்.
முன்னதாக 2006ல் லோரிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. வருங்கால கணவர் திருமணத்திற்கு 4 மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் வருங்கால கணவர் இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.