எரிமலையின் நடுவில் உலகின் மதிப்புமிக்க வைரச் சுரங்கம் - எந்த நாட்டில் தெரியுமா?
உலகின் பணக்கார வைர சுரங்கம் குறித்து தெரிந்துக்கொள்வோம்.
வைர சுரங்கம்
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில்தான் உலகிலேயே மதிப்புமிக்க வைரம் உள்ளது. இங்குள்ள ஜ்வானெங் வைர சுரங்கம், உலகின் பணக்கார வைர சுரங்கமாகக் கருதப்படுகிறது.
இந்தச் சுரங்கத்தின் மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு செயலற்ற எரிமலையின் நடுவில் அமைந்துள்ள திறந்த குழி சுரங்கம் இது.
1 பில்லியன் மதிப்பு
ஒரு அரிய எரிமலை பாறை உருவாக்கமான கிம்பர்லைட் குழாயைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், இந்தச் சுரங்கம் நிலத்தடி வழியாகவும் சுரங்கம் தோண்டி வைரம் எடுக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சுரங்கம் 1973-ம் ஆண்டு டி பீர்ஸ் மேற்கொண்ட ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், 1982-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக வைரம் வெட்டி எடுப்பதற்காக திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.