டாய்லெட்டில் பேப்பர் வேண்டுமா? இனி இதுதான் விதி - கடும் அதிர்ச்சியில் மக்கள்!
கழிப்பறைகளில் டாய்லெட் பேப்பர் தொடர்பான புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது.
டாய்லெட் பேப்பர்
சீனாவில் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பொது கழிப்பறைகளில் டாய்லெட் பேப்பர் பயன்பாட்டையும், விளம்பரங்களையும் இணைத்துள்ளனர்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் சீனா இன்சைடர் @chinainsider என்ற கணக்கில் இருந்து அதிர்ச்சி வீடியோ ஒன்று பகிரப்பட்டது.
வெடித்த சர்ச்சை
அதில், கழிப்பறைகளுக்குள் நுழைந்த பிறகு டாய்லெட் பேப்பர் வேண்டுமென்றால், டிஸ்பென்சரில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்தால் உங்கள் மொபைல் போனில் ஒரு சிறிய விளம்பரம் காட்டப்படும்.
அந்த விளம்பரம் முடிந்ததும், டாய்லெட் பேப்பர் மெஷினில் இருந்து வெளியே வரும். இதை விரும்பாதவர்கள் விளம்பரங்களின் தொந்தரவு இல்லாமல் டாய்லெட் பேப்பரை பயன்படுத்த 0.5 யுவான் கட்டணமாக செலுத்த வேண்டும்.
இது சர்ச்சையாக வெடித்த நிலையில், பொது கழிப்பறைகளில் மக்கள் அதிகமாக டாய்லெட் பேப்பரை பயன்படுத்துவதாகவும், இதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சீன அதிகாரிகள் கூறுகின்றனர்.