உலகிலேயே 5 பணக்கார நாடுகள் இதுதானாம் - ஏன் தெரியுமா?
2023 ஆம் ஆண்டின் பணக்கார நாடுகள் குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்...
பணக்கார நாடுகள்

பணக்கார நாடுகளின் பட்டியலில் அயர்லாந்து முதலிடத்தில் இருக்கிறது. இந்த நாட்டின் குறைவான மக்கள் தொகையும், பொருளாதார நிலைத்தன்மையும் இந்த சாதனைக்கு காரணம். அதிக பணக்காரர்கள் இங்கு முதலீடு செய்துள்ளனர்.

2வது இடத்தில் லக்சம்பர்க் உள்ளது. தனி நபர் வருமானத்தில் முன்னணியில் இருக்கிறது. இங்கு ஒருவர் தினமும் சராசரியாக ரூ.20,000 சம்பாதிக்கிறார்.

அடுத்த இடத்தில் இருப்பது சிங்கப்பூர். முதலீடுகள் செய்வது, வர்த்தகம் என முதலிடத்தில் இருந்துவருகிறது. இந்த நாட்டில் ஒருவர் தினமும் சராசரியாக ரூ.14,000 சம்பாதிக்கிறார்.

4வது இடத்தில் கத்தார் இருக்கிறது. மிகவும் வளர்ந்த பொருளாதார நாடு என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்டின் சராசரி தனி நபர் வருமானம் இந்திய மதிப்பில் ரூ. 51 லட்சம். எண்ணெய் மற்றும் எரி வாயு ஆகியவை இதன் முக்கிய சொத்து.

அடுத்ததாக இருப்பது நார்வே. இந்த நாட்டில் ஒருவரின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.69 லட்சம். பணக்கார நாடுகள் பட்டியலில் இந்த நாடு பல ஆண்டுகளாக இடம் பிடித்து வருகிறது.