கடற்கரையில் காதலர்கள் உல்லாசம்; கொந்தளித்த மக்கள் - அரசு அதிரடி!
கடற்கரைப் பகுதியில் காதலர்கள் உல்லாசமாக இருக்கத் தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
காதலர்கள் உல்லாசம்
நெதர்லாந்து, உயிரே நகரில் புகழ்பெற்ற கடற்கரை அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் ஏராளமான காதல் ஜோடிகள் வருவது வழக்கம். மேலும், காதலர்கள் தனிமையில் நெருக்கமாக அமர்ந்து உல்லாசத்தில் ஈடுபடுவதும் உண்டு.

ஆனால், கடற்கரைக்குப் பொழுது போக்குவதற்காகக் குழந்தைகளுடன் பல பெற்றோர்கள் வருகின்றனர். அவ்வாறு குடும்பமாக வரக்கூடியவர்கள், காதலர்களின் செயல்களைப் பார்த்து முகம் சுழித்துச் செல்கின்றனர்.
அரசு அதிரடி
எனவே இந்த செயல்கள் குறித்து மாநகராட்சிக்கு அடுக்கடுக்கான புகார்கள் தொடர்ந்து வந்துள்ளது. அதனையடுத்து தற்போது கடற்கரைப் பகுதியில் காதல் ஜோடியினர் உல்லாசமாக இருக்க அரசு தடை விதித்துள்ளது.

மேலும், அரசாங்கத்தின் தடையை மீறி யாராவது கடற்கரையில் உல்லாசமாக இருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நிர்வாணமாக சன் பாத் எடுக்க வரும் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் பொது இடங்களில் நாங்கள் உல்லாசமாக இருப்பதில்லை, உடல் ஆரோக்கியத்திற்காக சன் பாத் எடுக்க வருகிறோம். இதனால் நாங்களும் பாதிக்கப்படுகிறோம் எனத் தெரிவிக்கின்றனர்.