இந்த பாஸ்போர்ட் மட்டும் இருந்தா போதும்.. 194 நாடுகளுக்கு விசா வேண்டாம்!

Japan Singapore India
By Sumathi Jan 11, 2024 12:17 PM GMT
Report

பவர்ஃபுல் பாஸ்போர்ட்ஸ் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

பவர்ஃபுல் பாஸ்போர்ட்

சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின்(IATA) தரவுகளின் அடிப்படையில், உலக சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

japan passport

விசா இல்லாமல் பெரும்பாலான நாடுகளுக்கு பாஸ்போர்ட் மூலம் பயணிக்க அனுமதிக்கும் பாஸ்போர்ட்டுகள் 'சக்திவாய்ந்த பாஸ்போர்டுகள்" என கூறப்படுகிறது. இந்த தரவரிசையில் 194 நாடுகள் இடம்பிடித்துள்ளன.

இந்த நாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட், விசாவே தேவையில்லை - இந்திய அரசின் புதிய விதிகள்!

இந்த நாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட், விசாவே தேவையில்லை - இந்திய அரசின் புதிய விதிகள்!

இந்தியா?

இதில் கடந்த ஐந்து ஆண்டுகளாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் முதலிடத்தில் உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் இருந்தால் 194 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். இரண்டாவது இடத்தில் பின்லாந்து, ஸ்வீடன், தென் கொரியா ஆகிய நாடுகள் உள்ளன.

india passport

இந்த நாட்டின் பாஸ்போர்ட் இருந்தால் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். மேலும் மூன்றாவது இடத்தில் ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

மேலும் இந்த பட்டியலில் இந்தியா 80வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவின் பாஸ்போர்ட மூலம் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். அதில், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட பிரபல சுற்றுலா நாடுகள் அடங்கும்.