ரூ.45 லட்சத்திற்கு விற்கப்படும் தண்ணீர் - அதில் அப்படி என்ன இருக்கு?
750 ml பாட்டில் தண்ணீர் ரூ.45 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.
கின்னஸ் சாதனை
உலகில் உள்ள ஒரு சில பணக்காரர்கள் உலகின் மிக விலை உயர்ந்த தண்ணீரை பருகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கு அக்வா டி கிரிஸ்டலோ டிரிபுட்டோ ஏ மோடிக்லியானி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

உலகின் மிக விலை உயர்ந்த வாட்டர் பாட்டில் என்ற கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளது. ரூ.45 லட்சம் மதிப்பிலானது. இந்த தண்ணீர் இத்தனை விலை உயர்ந்ததாக இருப்பதற்கான காரணம் அதன் பேக்கேஜிங் எனக் கூறப்படுகிறது.
24 கேரட் தங்கம்
இந்த தண்ணீரில் 5g அளவு 24 கேரட் தங்கம் கலக்கப்பட்டுள்ளது. இது அந்த நீருக்கு காரத்தன்மையை சேர்க்கிறது. அதோடு அக்வா டி கிரிஸ்ட்டிலோவின் ஒவ்வொரு பாட்டிலும் ஒரு பகுதி நீரானது பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு நீரூற்றிலிருந்து எடுக்கப்பட்டது, மற்றொன்று ஃபிஜியில் உள்ள ஒரு நீரூற்றிலும், மூன்றாவது பகுதி ஐஸ்லாந்தில் உள்ள பனிப்பாறைகளிலிருந்தும் எடுக்கப்பட்டது.

சராசரியாக நாம் பருகும் குடிநீரை காட்டிலும் இந்த நீர் அதிக அளவு ஆற்றலை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan