உலகின் நீளமான பாலம் எங்கே இருக்கு தெரியுமா? இங்கு நீங்கள் நினைத்தாலும் போய்விட முடியாது!
உலகின் மிக நீளமான 3 நகரங்களை இணைக்கும் பாலம் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.
நீளமான பாலம்
ஹாங்காங், மக்காவ் நகரங்களை பிரதான சீனாவின் ஜூகாய் நகரை இணைக்கும் இந்த பலமானது உலகின் மிக அழகான மற்றும் நீளமான பாலம் என சொல்லப்படுகிறது. கடலுக்கு மேல் அமைந்துள்ள இது 1582 டிரில்லியன் செலவில் கட்டப்பட்டது.
அரிதாகவே பயன்படுத்தப்படும் இந்த பாலம்3 நகரங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்தால் ஒரு அழகான அனுபவத்தையும் பெறலாம். இந்த பாலம் நிலத்தை தொடாமல் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராட்சத பாம்பு போல நீண்டு கிடக்கிறது.
இதிலும் 6.7 கிலோ மீட்டர் பாலம் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதையாக செல்கிறது. அதன் மேல், சரக்குக் கப்பல்கள் சாதாரணமாக கடந்து செல்லும். சுரங்கபாதையின் இருபுறமும் இரு செயற்கைத் தீவுகளையும் உருவாக்கி சீன பொறியாளர்கள் அசத்தியுள்ளனர்.
இந்த பலம் திறக்கப்பட்டதில் இருந்து வெகு சிலரே இதை பயன்படுத்துகின்றனர். ஹாங்காங்கை தெற்கு நகர்ப்புற பகுதியான ஜுஹாய் மற்றும் முத்து ஆற்றின் முகப்பில் சூதாட்டத்திற்கு பிரபலமான சர்வதேச நகரமான மக்காவுடன் இந்த நீண்ட பாலம் இணைக்கிறது.
எங்க இருக்கு?
இந்த மூன்று நகரங்களையும் பொருளாதார ரீதியாக ஒன்றிணைப்பதே அதன் நோக்கமாக இருந்தது. இதன்மேல் பயணம் செய்வதில் நிறைய நேரத்தை மிச்சப்படுத்துகிறது என்கின்றனர். இந்த பாலம் மூலம் 4 மணி நேர பயணம் 45 நிமிடங்களாக குறைகிறது.
எட்டு ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் வந்தாலும், 40 கிலோ மீட்டர்வேகத்தில் புயல் வீசினாலும், 120 வருடங்களுக்கு இந்த பாலத்தை யாராலும் அசைக்க முடியாது என்று சத்தியம் செய்கிறது சீனா. எல்லாவிதமான பெர்மிட்கள் இருந்தாலும் இந்த பாலத்திற்குள் நுழைவது கடினம் , ஏனென்றால் ஒரு நாளைக்கு 150 கார்கள் மற்றும் அனுமதி.
மேலும், விண்ணப்பதாரர் ஹாங்காங்கின் நிரந்தர குடியுரிமை இருக்கவேண்டும்.உரிய ஆவணங்களுடன் அனுமதி சீட்டை பெற்றால் மட்டுமே பயணம் மேற்கொள்ள முடியுமாம். அனுமதியை பெற 12 நாட்கள் ஆகும் என்பது குறிப்பிட்டத்தக்கது .
இந்த பாலத்தின் ஒரு பாதை ஹாங்காங்-மக்காவோவிற்கும், ஒரு பாதை சீனாவிற்கும் செல்கிறது.எனவே, இடையில் பாதைகளை மாற்றும் செயல்முறையை ஒருவர் மேற்கொள்ள வேண்டும். பாலம் குறைந்த வேக வரம்பையும் கொண்டுள்ளது. மேலும், மத்திய மக்காவை அடைந்த பிறகு கார் பார்க்கிங்கில் நிறுத்த நீண்ட நேரம் ஆகும்.