ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன்..கருங்காலி ரகசியத்தை போட்டுடைத்த லோகேஷ் கனகராஜ்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் அணிந்திருக்கும் கருங்காலி மாலை ரகசியத்தை கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘இனிமேல்’ எனும் பாடலில் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார். ரொமன்ஸ்க்கு பஞ்சமே இல்லாத வகையில் இந்த பாடல் உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
தற்போது இந்த பாடல் ஆல்பம் நேற்று வெளியான நிலையில்,இருவரும் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துள்ளனர். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பாடல் குறித்து இருவரிடமும் உரையாடல் நடைபெற்றது.
அப்போது, லோகேஷ் கனகராஜ் நீண்ட நாட்களாக கருங்காலி மாலை அணிந்திருப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. ஏனெனில், அவர் அணிந்துருக்கும் கருங்காலி பயங்கர ட்ரெண்டாகியதை தொடர்ந்து அதில் என்னென்ன நன்மைகள் உள்ளது என யூடியூப் சேனல்கள் வீடியோ வெளியிட்டு வந்தது.
நெடுநாள் ரகசிய
அதற்கு பதிலளித்த அவர், “ஒரு உண்மையைச் சொல்லி விடுகிறேன். எந்த ஒரு நம்பிக்கையின் அடிப்படையிலும் இந்த மாலையை நான் அணியவில்லை. ‘விக்ரம்’ படப்பிடிப்பு சமயத்தில் இருந்துதான் இதை நான் அணிந்து வருகிறேன்.
ஒருமுறை படப்பிடிப்பு முடித்துவிட்டு திரும்பும்போது எதிர்பாராத விதமாக விபத்தில் மாட்டிவிட்டேன். நல்லபடியாக, பெரிதாக எந்த சேதமும் இல்லை. இதைப் பார்த்துவிட்டு, என்னுடைய நண்பர், கலை இயக்குநர் சதீஷ்தான் இந்த மாலை வாங்கிக் கொடுத்தார்.
இதை அணிந்து கொண்டால் என்னைச் சுற்றி இருக்கும் நெகட்டிவிட்டி குறையும் என்று சொன்னார். அவர் ஆசையாக வாங்கிக் கொடுத்தது என்பதால், மறுக்க முடியாமல் அணிந்திருக்கிறேன். மற்றபடி நம்பிக்கை எதுவும் இல்லை” என கூறியுள்ளார்.