கிச்சனில் உள்ள இந்த 6 பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும் தெரியுமா? உடனே தூக்கி வீசுங்கள்!
சமையலறையில் நாம் அன்றாட பயன்படுத்தும் சில பொருட்களில் புற்றுநோயை உண்டாக்க கூடியவை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சமையலறை
சமையலறையில் நாம் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருளும் நமது ஆரோக்கியத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் நாம் சமைக்க பயன்படுத்தும் சில பொதுவான பொருட்களில் புற்றுநோயை வரவழைக்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அது என்னென்ன பொருட்கள் என்பதை தெரிந்துகொள்வதன் மூலம், நாம் விழிப்புடன் இருந்து புற்றுநோயிலிருந்து பாதுகாக்கலாம்.
நான் ஸ்டிக் குக்வேர்
இன்றைய காலகட்டத்தில் சமைப்பதற்கு பயன்படும் நான் ஸ்டிக் பொருட்கள் பெரும்பாலான சமையலறைகளில் காணப்படுகிறது.
ஆனால், நான்ஸ்டிக் கோட்டிங்கை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும் "பெர்ஃபுளோரோஆக்டநோயிக்" அமிலமானது புற்றுநோயை உண்டாக்கும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சமைக்கும் பொழுது அதிகபடியான வெப்பநிலை அந்த பொருளில் பட்டு அதிலிருந்து வெளிவரும் புகை மிகவும் ஆபத்தானது ஆகும்.
பிளாஸ்டிக் பொருட்கள்
பெரும்பாலான சமையல் அறையில் தற்போது பிரதானமாக பிளாஸ்டிக் பொருட்கள் தான் உள்ளது.
ஆனால் இந்த பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்ய உபயோகிக்கும் பிஸ்பினால்A என்ற கெமிக்கலானது நமக்கு ஹார்மோன் சீர்குலைவை ஏற்படுத்தி, நமது நோய் எதிர்ப்பு சக்தியை சமரசம் செய்கிறது. எனவே முடிந்த அளவு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது நல்லது.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை
அன்றாட பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை நமது உடலில் புற்றுநோய் வளர்ச்சியை ஊக்குவிக்க கூடியதாக அமைகிறது.
இந்த சர்க்கரையை அதிகம் சாப்பிட்டால் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
பதப்படுத்தப்பட்ட இறைச்சி உட்கொண்டால் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் குறிப்பாக கோலோரெக்டல் எனும் புற்றுநோய்.
இவ்வாறு அதனை பதப்படுத்துவதுக்கு பயன்படுத்தப்படும் நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்கள் நமது உடலில் நைட்ரோசமைன்களாக மாற்றமடைகின்றன. இதன் காரணமாக நமக்கு புற்றுநோய் உருவாகிறது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
கேன்களில் அடைக்கப்பட்டு வரும் உணவுகள் பயன் படுத்த எளிமையாக இருந்தாலும் அதில் இருக்கக்கூடிய பிஸ்பினால்A (BPA) காரணமாக நமக்கு புற்றுநோய் உண்டாகுமாம்.
கேன்களின் ஓரங்களில் இருக்கும் BPA உணவுகளில் கலக்க அதிகம் வாய்ப்புள்ளது. இந்த கெமிக்கல் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியதாக அமைகிறது.
அலுமினியம் ஃபாயில்
அலுமினியம் ஃபாயிலின் பயன்பாட்டு சமையல் அறையில் தற்போது அதிகரித்துள்ளது.
ஆனால், இதனை பயன்படுத்தி சமைத்தாலோ அல்லது உணவை அதில் சேமித்து வைத்தாலோ அதில் இருக்கும் அமிலத்தன்மை நமது உடலில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தலாம். நீண்ட காலம் பயன்படுத்தினால் உடலில் அலுமினியம் அதிகமாகி அது புற்றுநோயை உண்டாக்கும்.