வெள்ளியங்கிரியில் தொடரும் விபரீதம்; 2 நாட்களில் 3 பேர் பலி - வனத்துறை எச்சரிக்கை!

Coimbatore Death
By Swetha Mar 25, 2024 11:07 AM GMT
Report

வெள்ளியங்கிரியில் மலையில் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதாக வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளியங்கிரி

கோவை மாவட்டம், பூண்டி பகுதியில் உள்ள வெள்ளிங்கிரி மலையின் ஏழாவது மலை உச்சியில் வீற்றிருக்கும் சுயம்பு ஈசனை தரிசிக்க கடந்த மாதம் பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்தது.

வெள்ளியங்கிரியில் தொடரும் விபரீதம்; 2 நாட்களில் 3 பேர் பலி - வனத்துறை எச்சரிக்கை! | 2 Devotees Die While Climbing Vellingiri Mountain

இதை தொடர்ந்து, தினசரி மலை ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஐதராபாத்தை சேர்ந்தவர் சுப்பா ராவ்(57) ஆன இவர் தன நண்பர்களுடன் மலையேற தொடங்கினார்.

4-வது மலையில் நடந்து கொண்டிருந்த போது, சுப்பாராவிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். தகவலரிந்து அவரை அடிவாரத்திற்கு கொண்டு செல்லும் போதே உயிர்பிரிந்ததாக தெரிவித்தனர்.

ஆண்களே...நம்பிக்கை இருக்கோ இல்லையோ...தப்பி தவறி கூட இதெல்லாம் செஞ்சிடாதீங்க..!

ஆண்களே...நம்பிக்கை இருக்கோ இல்லையோ...தப்பி தவறி கூட இதெல்லாம் செஞ்சிடாதீங்க..!

வனத்துறை எச்சரிக்கை

அதேபோல, சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தை சேர்ந்தவர் தியாகராஜன்(35). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமணையில் ஊழியராக பணியாற்றி வந்தார். ஐவரும் தன்னது நண்பர்களுடன் வெள்ளிங்கிரி மலையேறி சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் மலை இறங்கினார்.

வெள்ளியங்கிரியில் தொடரும் விபரீதம்; 2 நாட்களில் 3 பேர் பலி - வனத்துறை எச்சரிக்கை! | 2 Devotees Die While Climbing Vellingiri Mountain

அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அதிகாலை தேனியை சேர்ந்த பாண்டியன் (40) என்பவரும் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

இது குறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் தொடங்கியதில் இருந்து 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதால் இதய பிரச்சினை உள்ளவர்கள் மலையேறுவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.