300 கிமீ தூரத்திற்கு நிற்கும் வாகனங்கள் - கும்ப மேளாவால் உலகின் மிக நீண்ட டிராபிக் ஜாம்

Uttar Pradesh
By Karthikraja Feb 10, 2025 11:44 AM GMT
Report

 கும்ப மேளாவிற்கு வந்த கூட்ட நெரிசலால் 300 கிமீ தூரத்திற்கு டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கும்பமேளா

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நடைபெறும் கும்பமேளா நிகழ்வு, உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 வரை நடைபெற உள்ளது. 

கும்பமேளா

இதுவரை 39 கோடி பேர் புனித நீராடியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பல்வேறு பிரபலங்கள் நீராடினர். 

கும்பமேளாவில் 30 பேர் உயிரிழப்பு; அதெல்லாம் பெரிய விஷயமில்லை - நடிகை சர்ச்சை பேச்சு

கும்பமேளாவில் 30 பேர் உயிரிழப்பு; அதெல்லாம் பெரிய விஷயமில்லை - நடிகை சர்ச்சை பேச்சு

டிராபிக் ஜாம்

இதில் கடந்த ஜனவரி 29ஆம் தேதி தை அமாவாசையை முன்னிட்டு, பக்தர்கள் எண்ணிக்கை அதிகமானதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் மாநில அரசு குறைத்து காட்டுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. 

maha kumbh latest traffic

ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதன்படி சனிக்கிழமை காலை முதலே அதிகப்படியான கூட்டம் வர துவங்கியதால் பிரயாக்ராஜ் மட்டுமின்றி உத்தர பிரதேச மாநில எல்லை வரை வரலாறு காணாத மிக பெரிய டிராபிக் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

300 கிமீ நீளம்

சில சாலைகளில் 200 முதல் 300 கிமீ நீளம் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்பதாக கூறப்படுகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த பல மாவட்டங்களில் உள்ள சாலைகளை போக்குவரத்து போலீசார் நிறுத்தியுள்ளனர். வெறும் 50 கிமீ தூரத்தை கடக்கவே 10 முதல் 12 மணி நேரம் ஆவதாக கூறப்படுகிறது.

இந்த போக்குவரத்து நெரிசல் சரியாக சில நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை உலகின் நீண்ட டிராபிக் ஜாம் என அங்கு இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.