அடேங்கப்பா.. 1247 கிலோ எடையில் உலகின் மிகப்பெரிய பூசணிக்காய் - வாய்ப்பிளக்கவைத்த விவசாயி!
1247 கிலோ எடை கொண்ட பூசணிக்காயை வளர்த்து வியக்கவைத்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வினோத போட்டி
அமெரிக்கா, கலிபோர்னியா மாநிலத்தில் ஹாஃப் மூன் பே என்ற பகுதியில் விவசாயிகளுக்கு நீண்ட காலமாக ஒரு வித்தியாசமான போட்டி நடைபெற்றது. அதில் விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் மிக பெரிய பூசணிக்காயை வளர்க்க வேண்டும்.
யாருடையது எடை அதிகமோ அவர்களுக்கு பரிசு வழங்கபடும். இந்த 50வது போட்டியில், மின்னசோட்டா மாநிலத்தை சேர்ந்த 43 வயதான தோட்டக்கலை வல்லுனரும், பயிற்சியாளருமான டிராவிஸ் கிரெய்கர் என்பவரும் கலந்து கொண்டார்.
உலகின் பெரிய பூசணி
இந்நிலையில், அவர் தோட்டத்தில் விளைந்த 1,247 கிலோகிராம் எடையுள்ள பூசணிக்காயை பலரும் கண்டு வியந்தனர். டிராவிஸ் 30 வருடங்களுக்கும் மேலாக பூசணிக்காய் வளர்ப்பு உள்ளிட்ட விவசாயத்தில் பெரும் ஆர்வலராக செயல்பட்டு வருபவர். இவர் வளர்த்த பூசணிக்காய் மிக பெரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, இவர் முதல் பரிசை வென்றவராக அறிவிக்கப்பட்டார்.
டிராவிஸிற்கு சுமார் ரூ.25 லட்சம் பரிசு தொகையாக கிடைத்தது. டிராவிஸ் வளர்த்த பூசணிக்காயை கொண்டு அமெரிக்கர்கள் விரும்பி உண்ணும் 'பை' (pie) என்ற உணவு வகைகளை சுமார் 687 எண்ணிக்கைகள் வரை தயாரிக்க முடியும் என்று சமையல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.