உலகிலேயே பெரிய புத்தர் கோயில் இதுதான் - எங்கே உள்ளது தெரியுமா?
உலகின் மிகப்பெரிய புத்தர் கோயில் குறித்த தகவல்களை தெரிந்துக்கொள்வோம்.
புத்தர் கோயில்
இந்தோனேசியா, மகேலாங் ரீஜென்சி அருகே போரோபுதூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு உள்ள புத்தர் கோயில் உலகின் மிகப்பெரிய புத்தர் கோயிலாக உள்ளது.
இது மகாயான புத்தப் பிரிவை சார்ந்த கோயில். மகாயானம், ஹீனயானம் என்று புத்த சமயத்தில் 2 பிரிவுகள் உள்ளன. அதில், மகாயானப் பிரிவை சேர்ந்தவர்கள் புத்தரை கடவுளாக வழிபடுகின்றனர்.
மகாயானம்
ஹீனயானத்தை சேர்ந்தவர்கள் அவரது போதனைகளை மட்டுமே பின்பற்றுகின்றனர். இந்த புத்தர் கோயில் சைலேந்திர வம்சத்தினரின் ஆட்சி காலத்தில் கி.பி.8 முதல் கி.பி.9-ம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டது.
ஒன்பது தளங்களை கொண்டுள்ளது. சாம்பல் நிற ஆண்டிசைட் போன்ற கற்களால் கட்டப்பட்டது. இதன் மொத்த தொலைவு 4 கிலோமீட்டர்.
இதில் மொத்தம் 504 புத்தர் சிலைகள் இடம்பெற்றுள்ளன.
யுனெஸ்கோ இதனை 1975-1982 வரை ஆய்வு செய்து உலக பாரம்பரிய சின்னத்தில் இணைத்துள்ளது.