35 நாடுகளுக்கு இலவச விசா அனுமதி - அரசு அறிவிப்பு

Sri Lanka Tourism
By Sumathi Aug 22, 2024 06:11 AM GMT
Report

35 நாடுகளின் குடிமக்களுக்கு இலவச விசா வசதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை

35 நாடுகளின் குடிமக்களுக்கு இலவச விசா வசதியின் கீழ் நாட்டுக்குள் நுழைய இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

35 நாடுகளுக்கு இலவச விசா அனுமதி - அரசு அறிவிப்பு | Visa Free For Sri Lanka To 35 Countries

அக்டோபர் 1, 2024 முதல் 6 மாதங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா - அறிவித்தது எந்த நாடு தெரியுமா?

இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா - அறிவித்தது எந்த நாடு தெரியுமா?

இலவச விசா

அதன்படி இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், அவுஸ்திரேலியா, டென்மார்க், போலந்து, கசகஸ்தான், சவூதி அரேபியா,. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாளம், சீனா, இந்தியா, இந்தோனேஷியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேஷியா, ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, செக் குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இஸ்ரேல், பெலாரஸ்,

srilanka free visa

ஈரான், சுவீடன், தென் கொரியா, கத்தார், ஓமன், பஹ்ரைன், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரிக்கும் முனைப்பிலும், சுற்றுலாத்தளங்களை மேம்படுத்தும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.