நீரில் மிதக்கும் 3 அடுக்கு மசூதி; நீருக்கடியில் தொழுகை - அதிசயம் ஆனால் உண்மை!
நீரில் மிதக்கும் ஒரு மசூதியை கட்டமைத்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீருக்கடியில் மசூதி
துபாய் அரசு நீரில் மிதக்கும் ஒரு மசூதியை கட்டமைத்து வருகின்றது. உலகிலேயே நீருக்கடியில் ஒரு மசூதி அமைக்கப்படுவது இதுவே முதல்முறை. 55 மில்லியன் திராம்கள் மதிப்பீட்டில் கட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.
துபாய் கடற்கரையில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் தான் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக பிரத்யேக நடை மேம்பாலம் ஒன்று அமைக்கப்படுகிறது.
வசதிகள்
3 அடுக்குகளை கொண்ட நீருக்கடியில் அமைக்கப்பட்டு வரும் மசூதியானது வழிபாட்டு தலமாக மட்டுமின்றி, எமிரேட்ஸின் சுற்றுலாவிலும் முக்கிய பங்கு வகிக்கும்.
முஸ்லீம்கள் மட்டுமின்றி பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் 50 முதல் 75 பேர் வரை தொழுகை நடத்த முடியும். மொத்த கட்டுமானத்தில் ஒரு பாதி நீருக்கு அடியில் இருக்கும்.
மேற்பகுதியில் அமரும் இடம், காபி ஷாப் இடம்பெற்றிருக்கும். தொழுகை நடத்தும் இடம், கை கழுவும் இடம் உள்ளிட்டவை நீருக்கு அடியில் இருக்கும்.
தற்போது இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அனைவரது கவனம் ஈர்த்துள்ளது.