சென்னையில் முதல் முறை மிதக்கும் உணவகம் - இவ்வளவு சிறப்பம்சங்களா!
சென்னையில் மூன்று மாதங்களில் மிதக்கும் உணவகம் திறக்கப்படவுள்ளது.
மிதக்கும் உணவகம்
சென்னை ECR சாலையில் முட்டுக்காடு படகு இல்லம் அமைந்திருப்பது அனைவரும் அறிந்ததே. அதனை இன்னும் ஸ்பெஷலாக நினைவில் வைக்க இரண்டு அடுக்கு மிதக்கும் உணவகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மூன்று மாதங்களில் பணிகள் நிறைவடைந்து பொதுமக்களுக்கு திறக்கப்படவுள்ளது.
5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மிதக்கும் 25 அடி அகலமும் 125 அடி நீளமும் கொண்ட உணவகத்தில் ஒரே நேரத்தில் 100 பேர் வரை எளிதாக உணவருந்த முடியும். படகின் கீழ்த்தளத்தில் குளிரூட்டப்பட்ட டைனிங் ஹாலும், சிறு சிறு தனி அறைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
முட்டுக்காடு
மேல் தளத்தில் திறந்தவெளி ரெஸ்டாரன்ட் இருக்குமாம். இதற்கிடையில், படகு அமைக்கும் பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மார்ச் 24 அன்று தொடங்கி வைத்தார். இதற்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் இத்திட்டத்தை மற்ற சுற்றுலா தலங்களுக்கும் விரிவுபடுத்துகிறோம்.
சிறிய சமூக விழாக்கள் மற்றும் அரசாங்கத் துறைகளின் கூட்டங்களை நடத்துவது சிறந்ததாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.