ஒரிஜினல் அயன் மேன்? டைட்டானிய இதயத்தால் வாழும் உலகின் முதல் மனிதர்
டைட்டானிய இதயத்தால் ஒரு மனிதர் வாழும் விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டைட்டானிய இதயம்
58 வயதான அமெரிக்காவை சேர்ந்த ஒருவருக்கு உலகில் முதன்முறையாக டைட்டானியத்தால் செய்யப்பட்ட இதயத்தை பொறுத்தி மருத்துவர்கள் சாதித்துள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான bivacor என்ற நிறுவனம், உருவாக்கிய titanium blood-pumper என்ற இந்த கருவியானது, இதய செயலிழப்பு அபாயத்தில் உள்ளவர்களுக்கு வேறொரு இதயத்தை பொருத்தும் வரை இது ஒரு மாற்று இதயமாக செயல்படுகிறது. இது முழுக்க முழுக்க டைட்டானியத்தால் ஆனது.
டேனியல் டிம்ஸ்
இது உண்மையான இதயத்தை போல துடிக்காமல், இதிலுள்ள magnetically levitating rotor மூலம் நுரையீரல் மற்றும் உடலின் மற்ற பகுதிகளுக்கு இரத்தத்தை பம்ப் செய்து தள்ளுகிறது. இந்நிலையில் 58 வயதான நபருக்கு மாற்று இதயம் பொருத்தும் வரை 8 நாட்களாக இந்த டைட்டானிய இதயம் சிறந்த முறையில் அவரின் உடலில் வேலை செய்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த BIVACOR இன் நிறுவனர் டேனியல் டிம்ஸ் , "எங்கள் TAH இன் வெற்றிக்கு நான் நம்பமுடியாத அளவிற்கு பெருமைப்படுகிறேன். எங்கள் முதல் நோயாளி மற்றும் அவர்களது குடும்பத்தினரின் தைரியம், எங்கள் குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் டெக்சாஸ் ஹார்ட் இன்ஸ்டிடியூட் நிபுணர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இதன் கச்சிதமான அளவு பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட, அனைத்து தரப்பினருக்கு ஏற்றதாக அமையும் என்றும், செயற்கை இதயங்களை விட பல நன்மைகளை வழங்குகிறது என்றும் தெரிவித்துள்ளார்.