தமிழ்நாட்டில் இவர்கள் மட்டும் ஹெல்மெட் அணிய தேவையில்லை - யார் தெரியுமா?
தமிழ்நாட்டில் குறிப்பிட்ட மக்களுக்கு ஹெல்மெட் அணிவதிலிருந்து அரசாங்கம் விலக்கு அளித்துள்ளது.
ஹெல்மெட்
இந்தியாவில் சட்டப்படி இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். அவ்வாறு ஹெல்மெட் அணியாமல் சென்று போக்குவரத்து காவலரிடம் சிக்கினால் அபராதம் விதிக்கப்படும்.
தற்போது இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என விதி நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஹெல்மெட் அணியாமல் சென்றாலும் சிலருக்கு அபராதம் விதிக்க முடியாது. அரசாங்கமே அவர்களுக்கு ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
மெய்வழி சாலை
சீக்கிய மத்ததை சேர்ந்தவர்களுக்கு தலைப்பாகை என்பது முக்கியமான விஷயம். அவர்கள் தலைப்பாகை அணியாமல் வெளியே செல்ல மாட்டார்கள். தலைப்பாகை அணியும் போது ஹெல்மெட் அணிய முடியாது என்பதால், மத நம்பிக்கை அடிப்படையில் அவர்களுக்கு ஹெல்மெட் அணிவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சீக்கியர் தலைப்பாகை அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ஹெல்மெட் அணிய வேண்டும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, மெய்வழி சபா மற்றும் மெய்வழி சாலை என்ற மார்க்கத்தை பின்பற்றுபவர்கள்
தலையில் தலைப்பாகை அணிவதை வழக்கமாக வைத்துள்ளனர். எனவே தங்களுக்கு ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென நீதி மன்றத்தை நாடினர். இதன் அடிப்படையில், தமிழக அரசு 2007 ம் ஆண்டு அரசாணை வெளியிட்டிருந்தது. இந்த மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது அரசாணை நகலை கையில் வைத்து இருப்பார்கள். போக்குவரத்து காவலர்கள் சோதனையின் போது ஹெல்மெட் குறித்து கேட்டால் இந்த நகலை கட்டி விட்டு செல்வார்கள்.