7000 வீடுகள்; தயாராகி வரும் மிதக்கும் செயற்கை நகரம் - என்னென்ன வசதிகள்?
மாலத்தீவில் ஆச்சரியமூட்டும் மிதக்கும் நகரம் தயாராகி வருகிறது.
மிதக்கும் நகரம்
மாலத்தீவில் 80 சதவீத நிலப்பரப்பு தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ளன, எனவே 2100ம் ஆண்டுக்குள் மாலத்தீவு நீரில் மூழ்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாலத்தீவில் புதிய மிதக்கும் நகரம் ஒன்றை உருவாக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இந்த புதிய மிதக்கும் நகரத்தின் திட்டத்தின் மூலம் தலைநகர் மாலேயிலிருந்து பத்து நிமிட கடல் பயணத்தில் சுமார் 20,000 மிதக்கும் குடியிருப்புகளை அமைக்கவுள்ளது. 100க்கும் மேற்பட்ட மிதக்கும் குடியிருப்புகள், அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் சுகாதார மையங்களை வடிவமைக்கப்பட்டுள்ளது.
அம்சங்கள்
சுமார் 2 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 7000 வீடுகள், உணவகங்கள், கடைகள், பள்ளிகள், ஹோட்டல்கள் முதற்கட்டமாக அமையவுள்ளது. நகரத்தின் கட்டிடங்கள் தரையில் கட்டப்பட்டு, பின் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு கடல் நீரில் நிலைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டபூர்வமான அதிகாரங்கள், பட்டாக்கள், வீட்டை வாங்கும், விற்கும் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. கடற்பாசிகள் மட்டும் பவளப்பாறைகள் வளர்ப்பு, சூரிய ஒளி மற்றும் கடல் அலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பு, சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர் விநியோகம்,
போக்குவரத்திற்கு மின்சார ஸ்கூட்டர், சைக்கிள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.
தொடர்ந்து, 2024ல் இந்த பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.