கோத்தபயவுக்கு இங்கே இடம் கிடையாது : இலங்கை அதிபரின் வருகைக்கு மாலத்தீவு மக்கள் எதிர்ப்பு

Gotabaya Rajapaksa
By Irumporai Jul 13, 2022 07:44 AM GMT
Report

 இலங்கையில் தொடர்ந்து நீடிக்குக் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அதிபர் கோத்தபய ராகபக்சேவின் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையினை தங்கள் வசமாக்கினர்.

மாலத்தீவில் தஞ்சம் அடைந்த கோத்தபய

இந்த நிலையில் போரட்டக்காரர்கள் அதிபர் மாளிகையினை முற்றுகையிடும் முன்பே கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து தப்பி ராணுவத்தலைமையிடத்தில் பாதுகாப்பாக இருந்ததாக கூறப்பட்டது.

கோட்டபய ராஜபக்ச தப்பி செல்ல உதவியதா இந்தியா : வெளியான அதிர்ச்சி தகவல்

அதே சமயம் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியினை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவலகள் வெளியான நிலையில் , கோத்தபய ராஜபக்சேவும் அவரது உறவினர்களும் மாலத்தீவில் தஞசமடைந்துள்ளதாகவும் அங்கே அவர்களுக்கு பலத்த பாதுகாப்பும் வழங்கப்படுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையில் அவசர நிலை

இந்த நிலையில் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவி செய்ததாக இலங்கையைச் சேர்ந்த சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தற்போது இலங்கையில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தப்பியோடிய நிலையில் இலங்கையில் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தபப்ட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக இந்த அறிவிப்பு என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இலங்கையில் உள்ள மக்கள் போராட்டத்திற்கு மாலத்தீவு மக்கள் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

மாலத்தீவு மக்கள் எதிர்ப்பு

ராஜபக்சே குடுமபத்தினர் மாலத்தீவு விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன் விமான நிலையத்தில் இருந்த இலங்கை மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ராஜபக்சே குடும்பத்தினர் மாலத்தீவுக்கு வந்தடைந்தவுடன், அவரது மனைவி மற்றும் பாதுகாவலர்கள் பலத்த பாதுகாப்புடன் ரகசிய தெரியாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று மாலத்தீவு விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கோத்தபயவுக்கு இங்கே இடம் கிடையாது   : இலங்கை அதிபரின் வருகைக்கு மாலத்தீவு மக்கள் எதிர்ப்பு | Dont Give Gotabaya Get Out Maldives People

 கோட்டாபயவை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு மாலத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் கூறியுள்ளார். மாலதீவில் கோத்தபயவுக்கு புகலிடம் அல்லது அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது என அவர் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

இதனால் கோத்தபயவுக்கு மாலத்தீவிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது .