கோட்டபய ராஜபக்ச தப்பி செல்ல உதவியதா இந்தியா : வெளியான அதிர்ச்சி தகவல்

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe
By Irumporai Jul 13, 2022 06:41 AM GMT
Report

இலங்கையில் தொடர்ந்து நீடிக்குக் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அதிபர் கோத்தபய ராகபக்சேவின் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையினை தங்கள் வசமாக்கினர்.

கோட்டபய ராஜபக்ச தப்பி செல்ல உதவியதா இந்தியா : வெளியான அதிர்ச்சி தகவல் | Srianka President Flee To Maldives India

கலவரமான இலங்கை

இந்த நிலையில் போரட்டக்காரர்கள் அதிபர் மாளிகையினை முற்றுகையிடும் முன்பே கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து தப்பி ராணுவத்தலைமையிடத்தில் பாதுகாப்பாக இருந்ததாக கூறப்பட்டது. அதே சமயம் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியினை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவலகள் வெளியானது.

அதே சமயம் ,கோத்தபய ராஜபக்சேவும் அவரது உறவினர்களும் மாலத்தீவில் தஞசமடைந்துள்ளதாகவும் அங்கே அவர்களுக்கு பலத்த பாதுகாப்பும் வழங்கப்படுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவி செய்ததாக இலங்கையைச் சேர்ந்த சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நாங்கள் உதவவில்லை

இதுதொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: அதிபர் கோத்தபய ராஜபக்ச இலங்கை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவியது என்ற அடிப்படையற்ற மற்றும் ஊக ஊடக அறிக்கையாகும். இதனை திட்டவட்டமாக மறுக்கிறோம்.

ஜனநாயக வழிமுறைகள் மற்றும் விழுமியங்கள், ஜனநாயக நிறுவனங்கள், இலங்கை அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் மட்டுமே இலங்கை மக்களுக்கு இந்தியா உதவுகிறது.

இலங்கை மக்களின் முன்னேற்றத்திற்கான அவர்களின் கனவுகளை நனவாக்க இந்தியா அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று மீண்டும் வலியுறுத்துவோம் என தெரிவித்துள்ளது.

இலங்கையில் அவசரநிலை பிரகடனம்

தற்போது இலங்கையில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்திபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தப்பியோடிய நிலையில் இலங்கையில் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தபப்ட்டுள்ளதுஇலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக இந்த அறிவிப்பு என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.