உலகிலேயே முதல் பள்ளிவாசல்; அதுவும் 3-ம் பாலினத்தவருக்காக.. எங்கு தெரியுமா?
மூன்றாம் பாலினத்தவருக்கென பள்ளிவாசல் முதன்முறையாக திறக்கப்பட்டுள்ளது.
ஹிஜ்ரா
வங்கதேசத்தில் இஸ்லாம் மதத்தை பின்பற்றும் ‘ஹிஜ்ரா’ சமூக மூன்றாம் பாலினத்தவர்கள், அங்குள்ள பள்ளிவாசல்களில் வழிபாடு செய்யவோ, தொழுகை செய்யவோ அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அங்கு தாகாவின் வடக்குப் பகுதியில், பிரம்மபுத்ரா நதிக்கரையோரம் அமைந்துள்ள மைமன்சிங் நகர் அருகே கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிவாசலில், மூன்றாம் பாலினத்தவர்கள் தொழுகை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதல் பள்ளிவாசல்
ஹிஜ்ரா தொண்டு அமைப்பின் நிறுவனர் முஃப்தி அப்துர் ரஹ்மான் ஆசாத்தின் முன்னெடுப்பில், ஹிஜ்ரா சமூக மூன்றாம் பாலினத்தவர்களின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ளது. ‘தக்ஷின் சார் கலிபாரி பள்ளிவாசல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த மூன்றாம் பாலினத்தவர்கள் உடல்களை புதைப்பதற்கான இடமும் இந்த பள்ளிவாசலின் அருகேயே ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளிவாசல் உலகிலேயே மூன்றாம் பாலினத்தவருக்கான முதல் பள்ளிவாசல் என்பது குறிப்பிடத்தக்கது.