'மகாலட்சுமி' திட்டம்: அனைத்து பெண்கள், திருநங்கைகளுக்கு இனி இலவசம் - அரசு அதிரடி அறிவிப்பு!
தெலுங்கானாவில் அனைத்து பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இலவச பயணம்
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 65 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதன் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து நேற்று முன்தினம் தெலுங்கானா மாநில முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றார்.

இந்நிலையில் 'மகாலட்சுமி' திட்டத்தின் கீழ் தெலுங்கானாவில் அனைத்து பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று முதல் இந்த திட்டம் நடைறைக்கு வருகிறது.
ஜீரோ டிக்கெட்
தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் கீழ் மாநில எல்லைகளுக்குள் இயக்கப்படும் பல்லே வெலுகு மற்றும் விரைவு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சேவையை தெலுங்கானாவில் வசிக்கும் பெண்கள் மட்டுமே பெற தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள், தங்களுடைய வசிப்பிட முகவரியை உறுதிப்படுத்தும் வகையிலான அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு 'ஜீரோ டிக்கெட்' வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan