உலகிலேயே மிகவும் காஸ்ட்லி - ஒரு கிலோ உப்பின் விலை ரூ. 30 ஆயிரமாம்!
உலகில் மிகவும் காஸ்ட்லியான உப்பு குறித்து தெரிந்துகொள்வோம்.
காஸ்ட்லி உப்பு
உலகின் பல நாடுகளில் மிக எளிதாக சமையல் உப்பு தயார் செய்யப்படுவதால் இதனுடைய விலை குறைவானதாக இருக்கிறது. ஆனால் விலை உயர்ந்த உப்புகளும் உயர்தர உணவகங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில் கொரியாவைச் சேர்ந்த மூங்கில் உப்பு என்கிற கொரியன் சால்ட் தான் உலகத்திலேயே அதிக விலை கொண்டதாக உள்ளது. இதனை அங்குள்ள மக்கள் பாரம்பரியமாக பயன்படுத்துகின்றனர்.
கொரியன் உப்பு
உடலில் பல நோய்களை தீர்ப்பதாகவும் நம்புகின்றனர். இந்த உப்பு ஒரு கிலோ 30,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த உப்பை 9 முறை மிக உயர்ந்த வெப்பநிலை வைத்து இதனை பதப்படுத்துகின்றனர்.
முதலில் சாதாரண உப்பு மூங்கில் கட்டைகளுக்குள் வைக்கப்பட்டு மஞ்சள் நிற களிமண்ணால் மூடப்படுகிறது. பின், இந்த மூங்கில் கட்டைகளை அதிக வெப்ப நிலையில் வைக்கின்றனர். இதனால் உப்பின் தன்மை மாறுபாடு அடையும். இதே முறையை மீண்டும் மீண்டும் தொடர்ந்து ஒன்பது தடவை செய்கிறார்கள்.
இந்த செயல்முறை நிறைவு பெற்ற பின் மூங்கில் உப்பு பல்வேறு வண்ணங்களாக மாற்றமடைகிறது. சாதாரண உப்பை மூங்கில் உப்பாக மாற்றுவதற்கு குறைந்தது 50 நாட்கள் ஆகிறது.