உலகிலேயே உயரம்.. அம்பேத்கர் சிலை திறப்பு; எங்கே தெரியுமா? உற்றுநோக்கும் நாடுகள்!

Andhra Pradesh YS Jagan Mohan Reddy
By Sumathi Jan 20, 2024 05:22 AM GMT
Report

உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கர் சிலை 

ஆந்திரா, விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 125 அடி உயரம் கொண்ட இந்த சிலை 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால்,

tallest-ambedkar-statue

இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது. சிலை அமைந்துள்ள பகுதி ஸ்மிருதி வனம் என அழைக்கப்படுகிறது. 18.81 ஏக்கர் பரப்பளவில், ரூ. 404.35 கோடி செலவில் இந்த சிலைகளும், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளும் கட்டப்பட்டுள்ளன.

வெறும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்தான் இந்த அம்பேத்கரா..என்ன செய்துவிட்டார் அப்படி?

வெறும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்தான் இந்த அம்பேத்கரா..என்ன செய்துவிட்டார் அப்படி?

உலகிலேயே டாப்..

இதற்காக 400 மெட்ரிக் டன் துரு பிடிக்காத எஃக்கும், 120 மெட்ரிக் டன் வெண்கலமும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அம்பேத்கரின் சிலைக்கு அருகே பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மைதானத்தில் மினி தியேட்டர், அருங்காட்சியகம், நீரூற்றுகள், வாகன நிறுத்துமிடம், உணவு விடுதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

andhra pradesh

இந்நிலையில் உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலையை ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து, தனது எக்ஸ் பக்கத்தில் இச்சிலை சமத்துவம், சமூக நீதியின் அடையாளம் என்பதால் ‛‛சமூக நீதி'க்கான சிலை எனக் குறிப்பிட்டுள்ளார்.