உலகின் சக்திவாய்ந்த பணம் கொண்ட நாடு தெரியுமா? 10-வது இடத்தில் தான் அமெரிக்காவே இருக்கு!
பணமதிப்பு
உலகின் சக்திவாய்ந்த பணம் எது என்று கேட்டால், பொதுவாக அனைவரும் குறிப்பிடுவது அமெரிக்கா டாலர் தான். ஆனால், உண்மையில் அப்படியல்ல. நிலைமை வேறாகவே உள்ளது. இந்த தொகுப்பில் உலகின் சக்திவாய்ந்த பணம் எந்த நாட்டில் உள்ளது என்பதை பற்றி பார்க்கலாம்.
அதனை பார்ப்பதற்கு முன்னதாக, பணம் மதிப்பு என்பது ஏதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை அறிவோம்.
வெளிநாட்டு நாணயம் ஜோடி வர்த்தகமாக செய்யப்படுகிறது, அதாவது எடுத்துக்காட்டாக, அமெரிக்க டாலர்களை இந்திய ரூபாயில் வாங்குவது. இல்லையென்றால், பிரிட்டிஷ் பவுண்டுகளுடன் சேர்த்து அமெரிக்க டாலர்களை வாங்குவது.
இப்படி வாங்குவதன் விளைவாக, "பரிமாற்ற விகிதம்" எனப்படும் மற்றொரு நாணயத்துடன் ஒப்பிடும்போது நாணயம் எப்போதும் விலையேற்றப்படுகிறது. பெரும்பாலான நாணயங்கள் "Floating" அடிப்படையிலேயே இருக்கிறது. அதாவது ஒவ்வொரு நாட்டின் பணத்தின் மதிப்பு என்பது தேவை மற்றும் விநியோகத்தைப் பொறுத்து மாறுபடுகின்றன.
இருப்பினும், சில நாணயங்கள் "pegged" போன்றதன் அடிப்படையில் அமைகிறது. அதாவது மற்றொரு நாணயத்துடன் (இந்திய ரூபாய்) ஒரு நாட்டின் நாணயத்தை ஒப்பிடும்போது அவற்றின் மதிப்பு ஒரு சராசரி விகிதத்தில் நிர்ணயிக்க1ப்படுகிறது. இந்த மாற்று விகிதங்கள் என்பது வெளிநாட்டு நாணயத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை பாதிக்கின்றன.
எடுத்துக்காட்டாக, டாலருக்கு எதிராக பவுண்டு பலவீனமடைந்தால், அமெரிக்காவில் ஸ்டெர்லிங்(பிரிட்டிஷ் பணம்) அடிப்படையில் அதிக செலவாக மாறுகிறது.
இந்த மாதம் - ஜூலை 2024 அடிப்படையில் எந்த நாட்டின் பணம் அதிக மதிப்புடன் உள்ளது என்பதை காணலாம்.
1- 1 குவைதி தினார் - 272.76 ரூபாய்
2- 1 பஹ்ரைனி தினார் - 222.15 ரூபாய்
3- 1 ஓமானி ரியால் - 216.94 ரூபாய்
4 - 1 ஜோர்டானியன் தினார் - 117.83 ரூபாய்
5 - 1 பிரிட்டிஷ் பவுண்ட் - 108.38 ரூபாய்
6 - 1 ஜிப்ரால்ட்டர் பவுண்ட் - 108.38 ரூபாய்
7 - 1 கேமன் ஐலண்ட் டாலர் - 101.39 ரூபாய்
8 - 1 சுவிஸ் பிரான்க் - 93.27 ரூபாய்
9 - 1 யூரோ - 90.99 ரூபாய்
10 - 1 அமெரிக்கா டாலர் - 83.53 ரூபாய்.