நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது புதிய 75 ரூபாய் நாணயம்..!
புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படுவதை கொண்டாடும் விதமாக 75 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது.
75 ரூபாய் நாணயம் வெளியீடு
புதிய நாடாளுமன்றத்தை சிறப்பிக்கும் வகையிலும் 75 ஆம் ஆண்டு சுதந்திரத்தை போற்றும் வகையிலும் 75 ரூபாய் நாணயம் வரும் 28 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
இந்த நாணயத்தில் நாடாளுமன்ற கட்டடம், அசோக சின்னம் இடம் பெறுகிறது. அதே போல பாரத், சன்சத் சங்குல் என்ற வார்த்தை ஹிந்தியிலும், இந்தியா, நாடாளுமன்றம் என்ற வார்த்தைகள் ஆங்கிலத்திலும் இடம் பெறுகிறது.
இந்தியா, நாடாளுமன்றம் என்ற வார்த்தைகள் ஆங்கிலத்திலும் இடம் பெறுகிறது. இந்த நாணயமானது 50% சில்வர், 40% செம்பு, 5% நிக்கல், 5% ஜிங்க் போன்ற உலோகத்தால் உருவாகிறது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். இதற்கு 25 கட்சிகள் ஆதரவும், 19 கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.