அமெரிக்காவையே முந்திய இந்தியா - எதுலனு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க
பாதுகாப்பான நாடுகளில் இந்தியா அமெரிக்காவை முந்தியுள்ளது.
பாதுகாப்பான நாடு
உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் தரவரிசை அந்த நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் அங்குள்ள குற்ற விகிதத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் அமெரிக்கா, பிரிட்டன் அல்லது வேறு எந்த சக்திவாய்ந்த ஐரோப்பிய நாடுகளும் இல்லை. மாறாக தென்மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு சிறிய நாடு இடம்பிடித்துள்ளது. அந்த நாட்டின் பெயர் அன்டோரா.
இந்தியா எந்த இடம்?
தொடர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கத்தார் மூன்றாவது இடத்திலும், தைவான் மற்றும் ஓமன் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
அமெரிக்கா 89வது இடத்திலும், பிரிட்டன் 87வது இடத்திலும் உள்ளது. இந்த இரண்டையும் ஒப்பிடும்போது, தரவரிசையில் இந்தியா 66வது இடத்தில் உள்ளது.
குறிப்பாக பாகிஸ்தான் 65வது இடத்தில் உள்ளது. வெனிசுலா கடைசி இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.