தாய்ப்பால் ஐஸ்கிரீம் அறிமுகம் - ஆனால், இத்தனை மாதங்கள் காத்திருக்க வேண்டுமாம்..
தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தப் போவதாக நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
ஐஸ்கிரீம்
அமெரிக்காவின் பிரபல பிராண்டான ஃப்ரீடா (Frida), தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
இந்த தாய்ப்பால் ஐஸ்கிரீமை சுவைக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் அறிவிப்பு தேதியிலிருந்து 9 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டுமாம்.
தாய்ப்பால் சுவை
ஆனால் உண்மையான தாய்ப்பாலில் இருந்து இந்த ஐஸ்கிரீம் வழங்கப்படபோவதில்லை. தாய்ப்பாலுக்கு நிகரான சுவையில் தாய்ப்பாலில் இருக்கும் ஊட்டச்சத்துகளை இந்த ஐஸ்கிரீம் வழங்கவுள்ளது.
இதில் இனிப்பு, உவர்ப்பு சுவையுடன் கால்சியம், இரும்பு, வைட்டமின் பி, வைட்டமின் டி உள்ளிட்ட சத்துக்கள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்ததையடுத்து, நெட்டிசன்கள் இதற்கு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.