அப்படியே கடல் கன்னி போன்ற உயிரினம்; அதிர்ச்சியில் தம்பதி - வைரல் புகைப்படம்!
தம்பதி பகிர்ந்துள்ள கடல் கன்னி போன்ற உயிரினத்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
கடல் கன்னி?
இங்கிலாந்து கடற்கரை ஒன்றில் பவுலா மற்றும் தவே ரீகன் என்ற தம்பதி தங்களது நேரத்தை செலவிட்டுள்ளனர். அப்போது கென்ட் பகுதியில் மார்கேட் என்ற இடத்தில் சுற்றியுள்ளனர்.
அங்கு கடல் கன்னி போன்ற உருவம் கொண்ட மர்ம உயிரினம் பாதி மணலில் புதைந்த நிலையில் இருந்துள்ளது. அது வேற்று கிரகவாசியின் உடல் மற்றும் தலையுடன், மீன் வாலுடன் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து இதன் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த பவுலா, என்னுடைய வாழ்க்கையில் இது போன்ற ஒன்றை நான் பார்த்ததே இல்லை.
தம்பதி அதிர்ச்சி
அது என்னவென்றே என்னால் கூற முடியவில்லை. அது ஒரு விசித்திர உயிரினம். அது சீல் என்ற உயிரினத்தின் இறந்த உடலாக இருக்க கூடும் என முதலில் நினைத்தேன். தலை மனிதனை போன்று இருந்தது. ஆனால், பின்பகுதி மீனின் வாலுடன் காணப்பட்டது. அது மென்மையாகவும் பஞ்சு போன்றும் இருந்தது.
எனினும், அது அழுகியது போன்ற உணர்வை ஏற்படுத்தவில்லை. ஆனால், நிச்சயம் அது வித்தியாசம் நிறைந்த ஒன்று என தெரிந்தது. அந்த மர்ம உயிரினம் என்னவென்று சுற்றியிருந்த யாராலும் கூற முடியவில்லை.
இந்த உயிரினத்தின் புகைப்படங்களை நாங்கள் எடுக்காவிட்டால், எங்களை ஒருவரும் நம்பியிருக்கமாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.