ரகசிய நடைமேடை; ஒரே நேரத்தில் 44 ரயில்கள் நிற்கலாம் - இதுதான் உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம்!
உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் பல மர்மங்களை கொண்டுள்ளது.
கிராண்ட் சென்ட்ரல்
நியூயார்க் நகரத்தில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல், உலகின் மிகப்பெரிய ரயில் நிலையமாக கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.
இந்த ரயில் நிலையத்தை கட்ட 10 ஆண்டுகள் ஆகியுள்ளது.44 நடைமேடைகள் மற்றும் 67 ரயில் பாதைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 1,25,000 க்கும் மேற்பட்ட பயணிகள் இங்கிருந்து பயணம் செய்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் 660 மெட்ரோ நார்த் ரயில்கள் இங்கு செல்கின்றன. இதன் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்று மெயின் கான்கோர்ஸில் உள்ள நான்கு முகம் கொண்ட ஓபல் கடிகாரம். பார்வையாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் சந்திக்கும் இடமாக உள்ளது.
கின்னஸ் சாதனை
பல ஹாலிவுட் படங்கள் இந்த ரயில் நிலையத்தில் படமாக்கப்பட்டுள்ளன. இங்கு ஏராளமான பார்வையாளர்கள் செல்வதால், ஆண்டுதோறும் 19,000 க்கும் மேற்பட்ட பொருட்கள் தொலைந்து போவதாக அறிவிக்கப்படுகிறது. இங்குள்ள வால்டோர்ஃப் அஸ்டோரியா ஹோட்டலுக்கு அடியில் ஒரு மறைக்கப்பட்ட தளம் உள்ளது.
இந்த ரகசிய தளத்தை ஹோட்டலில் இருந்து வெளியேறுவதற்கு ஜனாதிபதி பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் பயன்படுத்தியுள்ளார். மேலும், டிராக் 61 என்று அழைக்கப்படும் ஒரு ரகசிய தளத்தை வழக்கமான பயணிகள் சேவைகள் அணுக முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.