உலகின் கோடீஸ்வர பிச்சைக்காரர் - ஒருநாள் வருமானம் இவ்வளவா? அடேங்கப்பா!
பிச்சைக்காரர் ஒருவர், கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
NO.1 பிச்சைக்காரர்
பாரத் ஜெயின் என்பவர் மும்பையின் பல தெருக்களில் பிச்சை எடுத்து வருகிறார். வறுமையின் காரணமாக கல்வியை அவரால் பெறமுடியவில்லை. இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள், சகோதரர் மற்றும் தந்தையோடு வசித்து வருகிறார்.
2 மகன்களும் பள்ளிப்படிப்பை முடித்துள்ளனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இவரது சொத்து மதிப்பு ரூ. 7.5 கோடியாக உள்ளது. பிச்சை எடுப்பதன் மூலம் மாதம் ரூ.60 ஆயிரம் -75 ஆயிரம் சம்பாதிக்கிறார்.
வருமானம்?
மும்பையில் ரூ.1.2 கோடி மதிப்புள்ள இரண்டு படுக்கையறைகள் கொண்ட பிளாட் வைத்துள்ளார். 30 ஆயிரம் வாடகைக்கு 2 கடைகளை வைத்துள்ளார். ஒவ்வொரு நாளும் 10 முதல் 12 மணி நேரத்திற்குள் 2000-2500 ரூபாய் வசூல் செய்கிறார்.
குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் ஸ்டேஷனரி கடையை சொந்தமாக வைத்து நடத்துகிறார்கள். பிச்சை எடுக்க வேண்டாம் என்று பாரதத்திற்கு பலமுறை அறிவுறுத்தினாலும் பாரதம் கேட்காமல் பிச்சை எடுக்கும் வேலையை தொடர்கிறாராம்.
இவர் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் அல்லது ஆசாத் மைதானத்தில் பிச்சை எடுப்பதாக கூறப்படுகிறது.