மரணத்தால் மக்கள் நாயகன் ஆன பிச்சைக்காரர் - இறுதி ஊர்வலத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்

samugam
By Nandhini Nov 18, 2021 07:46 AM GMT
Report

எங்கேயாச்சும் பிச்சைக்காரர் இறந்துவிட்டால் அவரது உடலை தொட்டுக் கூட யாரும் தூக்க முன் வர மாட்டார்கள். நகராட்சி பணியாளர்களோ அல்லது தூய்மை பணியாளர்களோ சென்று தான் அவர்களின் உடலை எடுத்து எரியூட்டு மையத்திற்கு கொண்டு செல்வார்கள்.

இந்நிலையில், ஒரு பிச்சைக்காரர் மரணம் அடைந்ததும் அவருக்கு இறுதிச் சடங்கு நடத்தி இருப்பதோடு இறுதி ஊர்வலமும் நடந்தியுள்ளனர் அந்த ஊர் மக்கள். இந்த இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தது ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது. இச்சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

பசவா என்கிற ஹட்சா பாஸ்யா (45) மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் நீண்டகாலமாக அதே பகுதியில் சுற்றி வந்தார். பசவா, போவோர் வருவோரிடம் பிச்சை கேட்டு வந்துள்ளார். அப்படி பிச்சை கேட்டு கிடைக்கும் காசில்தான் அவர் சாப்பிட்டு வந்துள்ளார்.

யாரிடமும் ஒரு ரூபாய்க்கு மேல் அவர் வாங்கியது கிடையாது. பிச்சை கேட்கும் போது ஒரு ரூபாய்க்கு மேல் யார் கொடுத்தால் அதை வாங்க மறுத்து வந்துள்ளார்.

இதனால், அவரை ஒரு ரூபாய் பிச்சைக்காரர் என்றே அப்பகுதி மக்கள் அழைத்து வந்துள்ளனர். அவருக்கு பிச்சை கொடுப்பதால் தங்களுக்கு நல்லது நடக்கிறது என்று பலரும் நினைத்து வந்துள்ளனர். பொது மக்கள் மட்டுமல்ல, முன்னாள் துணை முதல்வர் எம்பி பிரகாஷ், முன்னாள் அமைச்சர் பரமேஸ்வர நாயக் ஆகியோரும் அந்த பிச்சைக்காரருக்கு பிச்சை கொடுப்பதால் தங்களுக்கு நன்மை நடக்கிறது என்று நம்பி வந்திருக்கிறார்கள்.

தங்களுக்கு கிடைத்த ஆசி என்று நினைத்து வந்திருக்கிறார்கள். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் திடீரென்று சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அவருக்கு இறுதி ஊர்வலம் நடத்தி உள்ளனர். 

மரணத்தால் மக்கள் நாயகன் ஆன பிச்சைக்காரர் - இறுதி ஊர்வலத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் | Samugam