உன்னை எப்படி கட்டியணைக்க முடியும்? போரில் கைகளை இழந்த 9 வயது சிறுவன்
இஸ்ரேல் தாக்குதலில் இரு கைகளையும் இழந்த 9 வயது சிறுவனின் புகைப்படம் World Press Photo 2025 ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
போரில் கைகளை இழந்த 9 வயது சிறுவன்
9 வயது சிறுவன் மஹ்மூத் அஜ்ஜோர் இரு தோள்பட்டைகளுக்கும் கீழ் கைகள் இன்றி இருக்கிறார். பாலஸ்தீன புகைப்படக் கலைஞர் சமர் அபு எலூப் என்பவர் நியூயார்க் டைம்ஸ் இதழுக்காக எடுத்துள்ளார்.
141 நாடுகளை சேர்ந்த 3778 புகைப்பட கலைஞர்கள் சுமார் 59,320 புகைப்படங்களை எடுத்து சமர்பித்துள்ளனர். இதிலிருந்தே குறித்த புகைப்படம் தெரிவாகியுள்ளது.
இதுகுறித்து World Press Photo வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது கைகள் துண்டிக்கப்பட்டததை முதன்முதலாக உணர்ந்த மஹ்மூத் தனது தாயை பார்த்து ”இனி எப்படி என்னால் உன்னை கட்டியணைக்க முடியும்” என கேட்டுள்ளார்.
சிறுவனின் கதையை சொல்லும் இப்புகைப்படம் சத்தமாக பேசக்கூடியது, தலைமுறைகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் போரின் கதையை பேசுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.