ஐரோப்பா நாடுகளுக்கு டஃப் கொடுக்கும் இந்தியா..லிட்டர் கணக்கில் குடிக்கும் நாடுகளின் பட்டியல்
உலகளவில் அதிகமாக மது அருந்தும் நாடு குறித்து பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மது பழக்கம்
மேலை நாடுகளில் மது பழக்கம் என்பது சாதாரணமாக வீட்டிலேயே இருந்து பழக்கப்படுகிறது. இருப்பினும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகே இந்த மது பழக்கங்களை குழந்தைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
அப்படி இருக்கும் நிலையில், வளர்ந்ததும் அவர்கள் மதுவை அருந்தாமல் எப்படி இருப்பார்கள் என்ற கேள்வி உங்கள் எழுகிறது என்றால், நாம் நாட்டில் கடும் கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையிலும் மது பழக்கத்திற்கு பலரும் அடிமையாகிப்போகிறார்கள்.
இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு விஷயமே. தற்போது உலகளவில் அதிகமாக மது அருந்துபவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன் படி, எப்போதும் போல ஐரோப்பா நாடுகளே முன்னிலை வகிக்கிறது.
இந்தியா இடம்
முதல் இடத்தில் ருமேனியா உள்ளது. சராசரியாக 27.3 லிட்டர் மது இந்நாட்டு மக்கள் அருந்துகிறார்கள். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் ஜார்ஜியா, செக் குடியரசு, லாட்வியா நாடுகள் முறையே 14.3, 13.2, 13.09 மதிப்பீட்டில் உள்ளது. இந்த பட்டியலில் ஜெர்மனி, உகாண்டா, ஜார்ஜியா, சீசேல்ஸ், ஆஸ்திரியா, பல்கேரியா, லித்துவேனியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.
சரி இதில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்பது தெரியுமா? முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை என்பதே பெருமூச்சு விடும் விஷயம் தான். இந்தியாவில் சராசரியாக ஒரு மனிதன் 4.9 லிட்டர் மது அருந்துகிறான் என குறிப்பிடப்பட்டுள்ளது.