மது - கள்ளச்சாராயம் வித்தியாசம் என்ன! மக்கள் ஏன் இந்த கள்ளச்சாராயத்தை தேடுகிறார்கள்?
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் ஏற்பட்டுள்ள கள்ளச்சாராய மரணங்கள் நாடு முழுவதுமே பேசும் பொருளாக மாறியுள்ளது. இதிலிருந்து தான் பலருக்கும் ஒரு கேள்வி, அது என்ன கள்ளச்சாராயம்.
சாராயத்திற்கும், கள்ளச்சாராயத்திற்கும் என்ன வித்தியாசம் என்றெல்லாம். இதிலிருந்து மது எவ்வாறு வித்தியாசப்படுகிறது என்பது அறிவோம். அது குறித்து தற்போது காணலாம். முதலில் மதுபானத்திற்கும் விஷச்சாராயத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை காணலாம். மதுவில் இருப்பது ethanol.
அது படிப்படியாக உடலை பாதிக்கிறது. விஷச்சாராயத்தில் இருப்பது மெத்தனால்(methanol). இது உடனடியாக உடலை பாதித்து மரணத்திற்கு வழிவகுக்கிறது. இவை அனைத்துமே கேடு தான் என உலக சுகாதர மையம் தெரிவிக்கிறது. எது மாதிரி சாப்பிட்டாலும் மது மது தான். ethanol பற்றி முழுமையாக அறிவோம். பீர் - 5%, ஒயின் 15, விஸ்கி,ரம், ஜின் - 40% ethanol இருக்கிறது.
அதேநேரத்தில் விஷச்சாராயத்தில் மெத்தனால் 95% இருக்கிறது. 70% இருந்தாலே மரணம் நேரலாம். இது நேரடியாக நரம்பு, மூளையை பாதிக்கிறது. அப்படி இருக்கும் நிலையில் மக்கள் ஏன் இதனை குடிக்கிறார்கள். மெத்தனால் எளிதாக தொழிற்சாலைகளில் கிடக்கிறது.
கள்ளத்தனமாக லாபத்திற்காக சாராயம் காச்சுபவர்களுக்கு மெத்தனால் விற்கப்படுகிறது. பாமரமக்கள் பாக்கெட் சாராயம் வாங்கி குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.
இது விலை குறைவு என்பதால் மக்கள் இதனை நோக்கி செல்கிறார்கள்.
அப்போ, ethanol மது வாங்கி குடிப்பது சரி என்று நினைக்காதீர்கள். அதுவும் மரணத்திற்கே வழிவகுக்கிறது. கொஞ்சம் காலதாமதம் ஆகலாம் அவ்வளவு தானே தவிர, இதுவும் கொடியதே.