4 கி.மீ தூரம் - 324 Compartments !! அறிமுகமான உலகின் நீளமான ரயில்!! எங்கு செல்கிறது தெரியுமா?
உலகின் மிகவும் நீளமான சரக்கு ரயில் தனது சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.
ரயில் பயணம்
உலக மக்கள் பெரும்பாலும் அதிகளவில் பயன்படுத்துவது ரயில் பயணத்தை தான். உள்ளூர் தினசரி பயணம், வெளியூர் பயணம், சரக்கு பரிமாற்றம் என பல வகையிலும் சிக்கனமான செலவில் இந்த பயணம் மக்களுக்கு அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாகவே இருக்கின்றது. நாட்டின் பொருளாதாரத்திலும் இந்த சரக்கு ரயில் போக்குவரத்துக்கள் பெரும் இடத்தை பிடிக்கின்றன. அப்படி இன்றியமையாததாக இருக்கும் ரயில் போக்குவரத்தில் மற்றுமொரு பெரும் முன்னெடுப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.
4 கி.மீ நீளம்
உலகின் மிக நீளமான ரயில் ஒன்று தற்போது தனது சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. சீனாவின் ஷூஜோ-ஹுவாங்குவா வழித்தடத்தில் பயணிக்கும் இந்த ரயிலானது பெரும் கவனத்தை தற்போது உலகம் முழுவதிலும் பெற்றுள்ளது.
இந்த ரெயிலானது ஷாங்சி மாகாணத்தில் உள்ள நிலக்கரி தளத்தையும், ஹெபே மாகாணத்தில் உள்ள ஹுவாங்குவா துறைமுகத்தையும் நேரடியாக இணைக்கிறது. இந்த ரயில் தான் மொத்தமாக 324 Compartment'டுகளை கொண்டுள்ளது.
இந்த ரயிலின் நீளம் 4 கிலோமீட்டராக உள்ளது. இந்த ரயிலை இழுத்து செல்ல 4 என்ஜின்களும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நீளமான ரயிலின் ஓட்டம் நாட்டின் பொருளாதாரத்தில் பெரிதாக எதிரொலிக்கும் என அந்நாட்டு அரசு நம்புகிறது.