நீருக்கடியில் மெட்ரோ ரயில் பயணம் - நாளை துவங்கி வைக்கும் மோடி - எங்கு தெரியுமா..?
நீருக்கடியில் செல்லக்கூடிய மெட்ரோ ரயிலை நாளை பிரதமர் மோடி துவங்கி வைக்கின்றார்.
ரயில் பயணம்
ரயில் பயணங்கள் பெரும் ஆர்வத்தை மக்களிடம் ஏற்படுத்தி விடும். அதற்கு பலவகையான காரணங்களும் உள்ளன.
ஜன்னல் ஓரம் - பாடல் கேட்டு கொண்டு, வெளிப்புற அழகை ரசித்த படியே பயணிப்பது நம்மில் பலருக்கும் அலாதியான ஒன்றாக இருக்கும். இந்த ரயில் பயணத்தை நீருக்கடியில் மேற்கொண்டால் எப்படி இருக்கும்.
இதனை ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள். அது தற்போது நிகழவுள்ளது.
நீருக்கடியில்..
இந்தியாவின் முதல் நதிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி நாளை (மார்ச் 6) கொல்கத்தாவில் திறந்து வைக்கிறார்.
கொல்கத்தாவின் ஹூக்ளி ஆற்றின் கீழ் இந்த மெட்ரோ சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது, இது ஹவுரா மைதானை எஸ்பிளனேடுடன் என்ற இடத்துடன் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி: சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய மைத்திரி! IBC Tamil

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil
