மெட்ரோ ரயிலில் ஆபாச உடையில் பயணம் செய்த இளம்பெண் - படு வைரலாகும் வீடியோ!
மெட்ரோ ரயிலில் ஆபாச உடையில் பயணித்த இளம் பெண்ணால் சர்ச்சை எழுந்துள்ளது.
ஆபாச உடை
டெல்லி, மெட்ரோ ரயிலில் இளம்பெண் நீச்சல் உடை அணிந்து பயணம் செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதில், இளம் பெண் ஒரு இருக்கையில் பெரிய கருப்பு நிற பையுடன் அமர்ந்திருந்தார். அவர் எழுந்து நிற்கும்போதுதான் அவர் அரைகுறை ஆடை அணிந்து இருப்பது தெரிய வந்தது.
அருகில் இருந்தவர்கள் இதனை கண்டும் காணாமல் இருந்தனர். சிலர் முகம் சுளித்தனர். தற்போது இதற்கு ஆதரவு, எதிர்ப்பு என விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
எச்சரித்த நிர்வாகம்
அதில், பயணிகள் சமூக அந்தஸ்தை பேணும் வகையில் கண்ணியமான ஆடைகளை அணிந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதுபோன்ற ஆடைகள் அணிவதன் மூலம் சக பயணிகளின் உணர்வுகளை அவமதிக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம்.
Seriously this is in delhi
— Tanisha Batra (@TanishaBatra80) March 31, 2023
Akhir Majburi kya hai ?#Delhi #delhimetro #PriyankaChopra #ChitrangdaSingh pic.twitter.com/x2BkeJsINz
டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் மற்றும் மெயின்டனன்ஸ் சட்டத்தின்படி பிரிவு 59-ன் கீழ் அநாகரீகமான ஆடை அணிந்து பயணிப்பது குற்றமாகும் என்று எச்சரித்துள்ளது. மேலும் தான் விரும்பிய ஆடை அணிவது தனிப்பட்ட சுதந்திரம்தான்.
ஆனாலும் பொது போக்குவரத்தில் இதுபோன்ற அநாகரீகமான ஆடை அணிந்து வருவதை தவிர்க்குமாறு தெரிவித்துள்ளது.