ஆபாச ஆடையால் பாலியல் சீண்டல் குற்றமில்லை - சர்ச்சை தீர்ப்பால் நீதிபதி இடமாற்றம்!
பாலியல் இச்சையை தூண்டும் ஆடையால், பாலியல் சீண்டலில் ஈடுபடுவது குற்றமில்லை என தீர்ப்பளித்த நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் புகார்
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் சிவிக் சந்திரன்(74). மாற்றுத்திறனாளியான இவர் மீது, கோழிக்கோடு அருகே உள்ள கொயிலானி கடற்கரையில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்தார்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, கோழிக்கோடு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் சிவிக் சந்திரன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதி எஸ். கிருஷ்ணகுமார் தீர்ப்பு வழங்கினார்.
ஆபாசமாக உடை
அதில் 'மனுதாரர் தனது முன் ஜாமின் மனுவுடன் இணைத்துள்ள புகைப்படத்தை பார்க்கும்போது, அவர் மீது புகார் கொடுத்திருக்கும் பெண் பாலியல் இச்சையை தூண்டும் விதத்தில் ஆபாசமாக உடையணிந்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது என மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கினார்.
அதேபோல், பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் தனக்கு சந்திரன் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று புகார் அளித்திருந்தார். சந்திரன் சாதிகளுக்கு எதிராக இருப்பவர், புரட்சியாளர்.
நீதிபதி இடமாற்றம்
அவர் எப்படி பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் எனத் தெரிந்தும் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என்பது நம்பமுடியவில்லை எனக் கூறி ஜாமீன் வழங்கினார் நீதிபதி.
இப்படி சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கிய செசென்ஸ் நீதிபதி எஸ். கிருஷ்ணகுமார் கோழிக்கோடு நீதிமன்றத்திலிருந்து கொல்லத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு,
ஆர். கொல்லத்தில் உள்ள தொழிலாளர் நீதிமன்றத்தில் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.