தன்னிடம் பாலியல் சீண்டல் செய்த 6 ஆண்களை துவம்சம் செய்த ரியல் சிங்கப்பெண் - வைரலாகும் வீடியோ

Viral Video
By Nandhini Jun 14, 2022 12:25 PM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ஒரு சிசிடிவி வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த சிவிடிவி வீடியோவில் -

ஒரு பெண் தெருவில் தனியாக நடந்து வந்துக் கொண்டிருக்கிறாள். அதைப் பார்த்த 6 பேர் அவளை வழிமறித்து நிற்கின்றனர். பின்னர், அப்பெண்ணிடம் அந்த 6 ஆண்கள் பாலியல் சீண்டலில் ஈடுபடுகின்றனர்.

பொறுமையை இழந்த அப்பெண், திடீரென அந்த 6 ஆண்களையும் தாக்குகிறார். சில தற்காப்பு கலைகளை பயன்படுத்தி அந்த 6 ஆண்களை வீரத்துடன் தன் காலால் உதைத்து சண்டையிடுகிறாள்.

தற்போது இந்த சிசிடிவி வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 25 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை டுவிட்டரில் இதுவரை 3.5 மில்லியனை தாண்டி பார்வையாளர்களையும், 9000க்கும் மேற்பட்ட ஷேர்களையும் பெற்றிருக்கிறது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், அப்பெண்ணின் துணிச்சலை வியந்து பாராட்டி வருகின்றனர். உங்கள் பெண் பிள்ளைகளுக்கும் இது போன்ற தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.   

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening