தன் குழந்தையை பிடுங்கிய சிறுமியிடம் தாய் குரங்கு செய்த செயலைப் பாருங்க - நெகிழ்ச்சி வீடியோ

Viral Video
By Nandhini Jun 13, 2022 09:58 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ -

அந்த வீடியோவில் தாய் குரங்கு தன் குட்டி குழந்தையை தன் மார்போடு அணைத்து மொட்டை மாடியில் வேர்க்கடலையை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. அப்போது, மொட்டை மாடிக்கு வந்த ஒரு சிறுமி தாய் குரங்கிடமிருந்து குட்டியை பிரிக்க முயற்சி செய்கிறார். ஆனால், அந்த தாய் அச்சிறுமியின் கையை தட்டிவிட்டு குரங்கு குட்டியை இறுக்கி அணைத்துக் கொள்கிறது.

பின்னர், விடாமல் அச்சிறுமி தாய் குரங்கிடமிருந்து குட்டியை பிரித்துக் கொண்டு கொஞ்சி விளையாடுகிறாள். உடனே, சிறுமியிடம் வந்து தன் குழந்தையை தாய் குரங்கு நைசாக பிடுங்கி வைத்துக் கொள்கிறது.

மறுபடியும் அச்சிறுமி குரங்கின் குட்டியை பிடுங்கி வைத்துக்கொள்ள, கடைசியாக சிறுமியின் தாய், சிறுமியிடமிருந்த குட்டி குரங்கை வாங்கி தாய் குரங்கிடம் கொடுத்து விடுகிறார்.

இந்த நெகிழ்ச்சி வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், அந்த தாய் குரங்கு சிறுமியை ஒன்றும் செய்யாமல் தன் குழந்தையை வாங்க, எவ்வளவு பாச போராட்டம் நடத்துகிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ -