4 லட்சம் பேரை கைவிட்ட ஐநா - உணவில்லாமல் கதறும் பாலஸ்தீனர்கள்!

United Nations Palestine
By Sumathi May 09, 2023 05:07 AM GMT
Report

 பாலஸ்தீனர்களுக்கு வழங்கப்பட்டுவந்த உணவை நிறுத்துவதாக ஐ.நா அறிவித்துள்ளது.

உணவு நிறுத்தம்

பாலஸ்தீனம், காஸாவில் 2.3 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். இதில், 45 சதவிகிதம் மக்கள் வேலையில்லாமலும், 80 சதவிகித பேர் வெளிநாட்டு உதவியை நம்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேல், எகிப்துடன் இணைந்து, பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்திவருகிறது.

4 லட்சம் பேரை கைவிட்ட ஐநா - உணவில்லாமல் கதறும் பாலஸ்தீனர்கள்! | World Food Programme Suspend Aid Palestinians

அதனால் மக்கள் பல ஆண்டுகளாக சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதற்கிடையில், 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு ஐநா உலக உணவுத் திட்டம் மூலம் உணவளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடுமையான நிதிப்பற்றாக்குறை காரணமாக உணவு திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

ஐநா முடிவு

இதுகுறித்து உலக உணவுத் திட்டத்தின் பாலஸ்தீன இயக்குநரான Samer Abdel jaber, ``உலக உணவுத் திட்டம் மூலம் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த இரண்டு லட்சம் பேருக்கு, ஒரு நபருக்கு 10.30 டாலர் மதிப்பிலான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுவந்தன.

4 லட்சம் பேரை கைவிட்ட ஐநா - உணவில்லாமல் கதறும் பாலஸ்தீனர்கள்! | World Food Programme Suspend Aid Palestinians

இந்த நிலையில், கடுமையான நிதிப்பற்றாக்குறை காரணமாக பாலஸ்தீனர்களுக்கு உதவியை நிறுத்துவது என முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. மேலும், காசா, மேற்கு கரையிலுள்ள 1.40 லட்சம் பேருக்கு ஐ.நா தனது உதவியைத் தொடரும்.

போதுமான நிதி பெறப்படாவிட்டால், ஆகஸ்ட் மாதத்துக்குள் உணவு, பண உதவியை முழுவதுமாக நிறுத்துவதற்கும் முடிவுசெய்யப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, ஐநாவின் இந்த முடிவை எதிர்த்து பாலஸ்தீனர்கள் பசி வேண்டாம் என கோஷமிட்டு வருகின்றனர்.