உக்ரைனை ரஷ்யா கைப்பற்றிவிட்டால்..... - அடுத்த புதிய அதிபர் இவர்தானாம்... - வெளியான புதினின் ரகசிய பிளான்
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 10-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
இந்தப் போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள். நேற்று அதிகாலை தெற்கு உக்ரைனின் எனர்ஹோடர் நகரில் உள்ள சபோரோஷியா அணுமின் நிலையம் மீது ரஷிய படைகள் நேரடியாக குறி வைத்து பயங்கரத் தாக்குதல் நடத்தியுள்ளன.
தற்போது, உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மக்கள் வெளியேற வசதியாக தற்காலிகமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆனால், இந்தப் போரில் உக்ரைனுக்கு பல நாடுகள் ஆதரவு கொடுக்கவில்லை.
இது உக்ரைன் மக்களுக்கு மட்டுமல்லாமல், அதிபர் ஜெலன்ஸ்கிக்கும் கடும் ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறது. இதை அவர் வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார்.
உலக நாடுகள் இப்போரில் விவாகரத்திற்கு உள்ளே வர மறுப்பதால், இன்னும் சில வாரங்களில் உக்ரைனை ரஷ்யா தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடும் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை ரஷ்யா உக்ரைனை கைப்பற்றிவிட்டால், ரஷ்யா ஆதரவுடன் அமையும் அரசில் அதிபராக யார் இருக்கபோகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
உக்ரைனின் முன்னாள் அதிபர் விக்டர் யானுகோவிச் தான் அதிபர் பதவிக்கு ரஷ்யாவின் சாய்ஸாக இருக்கிறாராம். 71 வயதாகும் விக்டர் யானுகோவிச் ஏற்கெனவே கடந்த காலங்களில் உக்ரைன் பிரதமராகவும், அதிபராகவும் இருந்துள்ளார்.
இந்த பதவிகளிலிருந்து 2 முறை அவர் நீக்கப்பட்டுள்ளார். இருந்தாலும், இவரை அதிபராக்கவே ரஷ்யா விரும்புவதாகத் தற்போது தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
விக்டர் யானுகோவிச்சை ஒரு சிறப்புச் சந்தர்ப்பத்திற்காக ரஷ்யா தயார்ப்படுத்துவதாக அந்நாட்டின் ஆன்லைன் செய்தி நிறுவனம் உக்ரைன்ஸ்கா பிராவ்தா செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.