உலகிலேயே அதிகம் படிச்சவங்க இருக்குற நாடு எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
உலகில் அதிகம் கல்வி அறிவு கொண்ட நாடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கல்வி அறிவு
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
அதில், கனடா முதலிடத்தில் உள்ளது. அங்கு 59.96% படித்தவர்கள் உள்ளனர். அதனையடுத்து 52.68% கல்வி அறிவுடன் ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தை லக்சம்பர்க் பெற்றுள்ளது.
இந்தியா எந்த இடம்?
அமெரிக்க மற்றும் பிரிட்டன் ஆகிய முன்னணி நாடுகள் 6 மற்றும் 8 வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியா இடம் பிடிக்கவில்லை. ஏனெனில், இந்தியாவில் கல்வி அறிவு மிகவும் குறைவாக உள்ளது. அங்கு, 20.4% பேர் மட்டுமே உயர்கல்வி அல்லது பட்டம் பெற்றுள்ளனர்.
முன்னதாக தேசிய புள்ளியல் கழகம் கல்வி வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் உள்ள 7 மாநிலங்களில் கல்வி தகுதி மிகவும் பின்தங்கி இருந்ததாக குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிரு்நத நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
