கழிவறை கூட தங்கம்தான்.. இந்த ஹோட்டலின் ரூம் வாடகை எவ்வளவு தெரியுமா?
தங்கத்தால் ஆன ஹோட்டல் குறித்து தெரியுமா?
கோல்டன் லேக் ஹோட்டல்
வியட்நாம், ஹனோய் நகரில் டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் என்ற ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இங்கு சுவர்கள் முதல் குளியலறை பொருட்கள் வரை கிட்டத்தட்ட அனைத்தும் தங்கத்தில் உள்ளது.
25 மாடிகள் மற்றும் 400 அறைகள் கொண்ட ஐந்து நட்சத்திர ஹோட்டல். இங்கு தங்கும் விருந்தினர்களுக்கு பரிமாறப்படும் பாத்திரங்கள் கூட தங்கத்தாலேயே செய்யப்பட்டுள்ளது.
தங்க முலாம்
ஹோட்டலின் முகப்பு 54,000 சதுர அடி. தங்க முலாம் பூசப்பட்ட ஓடுகளால் ஹோட்டல் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேற்கூரையில் அமைந்துள்ள infinity pool தங்க முலாம் பூசப்பட்ட செங்கற்களால் மூடப்பட்ட வெளிப்புறச் சுவரைக் கொண்டுள்ளது.
இங்கு தங்குவதற்கான அடிப்படை அறைக்கான விலை சுமார் 20,000 ரூபாய். டபுள் பெட்ரூம் தொகுப்புக்கு, ஒரு இரவுக்கு சுமார் 75,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பிரசிடென்ஷியல் சூட்டில் தங்குவதற்கு ஒரு இரவுக்கு 4.85 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.